வேலை தேடுபவர்களுக்கு உதவ UTC மையங்களில் MY Future Jobs!மனிதவள அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

பகான் டத்தோ, மே 28-
நாடு முழுவதும் உள்ள UTC முகப்பிடங்களில்
MY Future Jobs மையங்களை மேம்படுத்துவதில் மனித வள அமைச்சு தீவிர கவனம் செலுத்தி வருகிறது என்று மனித வள அமைச்சர்
வ. சிவகுமார் இன்று அறிவித்தார்.

இது முதலாளிகள் மற்றும் வேலை தேடுபவர்கள் விரைவாகவும் எளிதாகவும் வேலைகளை அணுகுவதற்கு உதவும் என்றார் அவர்.

Madani மலேசியா தொழில் அதிகாரமளிக்கும் திட்டத்தின் கீழ் TVET தொழில் அதிகாரமளிக்கும் திட்டம் மற்றும் தொழில் வளர்ச்சித் திட்டம் ஆகியவை இதில் அடங்கும் என்றார்.

பேராக் மாநிலத்தில் பகான் டத்தோவில் மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் சொக்சோ நிறுவனத்தின் வேலை வாய்ப்பு கண்காட்சி விழாவில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

MYFuturejobs தொழில் கண்காட்சி மற்றும் இல்லத்தரசிகளின் சமூகப் பாதுகாப்பு விழா பேராக் மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது இது இரண்டாவது முறையாகும்.

கடந்த பிப்ரவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் Batu Gajah நடைபெற்றது.

இப்போது இந்த கார்னிவல் Bagan Datuk நடத்தப்படுவது
முதல் முறையாகும். அந்த வகையில்
பகான் டத்தோ அதிர்ஷ்ட பூமியாகும் என்று அவர் சொன்னார்.

வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் அதைத் தொடர்ந்து வேலை இழப்பு ஆகியவற்றைக் கையாளவும் நாடு தழுவிய அளவில் வேலை வாய்ப்பு கண்காட்சியை மனிதவள அமைச்சு சொக்சோ நிறுவனம், மாநில அரசுகளுடன் இணைந்து நடத்தி வருகிறது.

கோவிட்-19 தொற்று நோயினால் மக்கள் பெரும் அளவில் வேலையை இழந்து பாதிக்கப்பட்டனர்.

பகான் டத்தோவில் நடைபெறும் வேலை வாய்ப்பு கண்காட்சி திருவிழாவில் 4 ஆயிரத்து 559 வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

இது மக்களுக்கு பெரும் அளவில் உதவி புரியும் என்று அவர் சொன்னார்.

துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி இன்று காலையில் சிறப்பு வருகை புரிந்து இந்த வேலை வாய்ப்பு கண்காட்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சொக்சோ நிறுவனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ சுபாஹான் கமால், சொக்சோ நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் அஸ்மான், பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் அ. சிவநேசன், ஊத்தாங் மெலிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் வசந்தி உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles