வீரப்போராட்டத்தில் தோல்வி கண்டதால் மனம் தளர வேண்டாம்! மலேசிய ஜோடி Thinaah – Pearly Tanக்கு மனிதவள அமைச்சர் சிவகுமார் உற்சாகம்

கோலாலம்பூர் மே 29-
மலேசிய மாஸ்டர் பேட்மிண்டன் போட்டியில் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் தோல்வி கண்டதால் மலேசிய இளம் பேட்மிண்டன் வீராங்கனைகளான Pearly Tan மற்றும் Thinaah Muralitharan மனம் தளர வேண்டாம் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

நேற்று நடைபெற்ற பரபரப்பான இறுதி ஆட்டத்தில் மலேசிய ஜோடி தீனா – பெயர்லி டான் 20-22, 21-8, 17-21 என்ற புள்ளிக்கு க்கும் தென்கொரியா ஜோடியிடம் தோல்வி கண்டது.

இருப்பினும் இந்த போட்டியில் மலேசிய வீராங்கனைகள் நடத்திய போராட்டம் மிகவும் பாராட்டுக்குரியது.

கால் இறுதி சுற்று மற்றும் அரையிறுதி சுற்றில் கடுமையான போராட்டம் நடத்தி மலேசிய ஜோடி இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.

இறுதி சுற்றில் மலேசியர்கள் வெற்றிக்காக வீரப்போராட்டம் நடத்தினர். இருப்பினும் அதிர்ஷ்டம் இவர்களின் பக்கம் இல்லாததால் கடைசியில் மூன்று புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பறிபோனது.

சமீப காலமாக தீனா – பெயர்லி டான் பல போட்டிகளில் அசத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் மனம் தளராமல் இனி வரும் போட்டிகளில் இவர்கள் வெற்றி பெற மனதார வாழ்த்துகிறேன் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles