மாணவர்களின் உரிமைகள் பாதுகாக்க வேலை வாய்ப்பு சட்டத்தை மறுஆய்வு செய்ய தயார்! அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

பினாங்கு ஜூன் 1-
தொழில்துறை நடைமுறை பயிற்சி பெறும் மாணவர்கள் உட்பட தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேலை வாய்ப்புச் சட்டம் 1955 போதுமானது.

எவ்வாறாயினும், தொழில்துறை பயிற்சி பெறும் மாணவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் இந்தச் சட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று சில தரப்பினரின் பரிந்துரைகளை ஆய்வு செய்யத் தயாராக இருப்பதாக மனிதவள அமைச்சர் வி.சிவகுமார் இன்று அறிவித்தார்.

தற்போதுள்ள வேலைச் சட்டம் 1955 போதுமானது. ஆனால் தற்போதுள்ள வேலைச் சட்டத்தைப் பார்க்க விரும்பும் சில தரப்பினரின் பரிந்துரைகளை நாங்கள் மறுபரிசீலனை செய்வோம் என்று தேசிய மனித மூலதன மாநாடு மற்றும் கண்காட்சி (NHCCE) 2023 இல் கலந்துகொண்ட பிறகு நிருபர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.

வடக்கு பினாங்கு பிராந்தியத்தில் தொழில்துறையினர் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வாய்ப்புகளை முக்கிய மையமாகக் கொண்டு பினாங்கு திறன் மேம்பாட்டு மையத்துடன் (PSDC) மனித வள மேம்பாட்டுக் கழகம் (HRD Corp) இந்த மனித வள மூலதன கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles