தீபாவளி சந்தையின் மூலம்
100 இந்திய வணிகர்கள் நன்மை அடைந்தவர்கள் தவிர கூத்தடிக்கவில்லை!

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ கணபதி ராவ் தலைமையில் இயங்கும் ஐ சீட் முலம் கிள்ளான் லிட்டில் இந்தியா பாடாங் செட்டியில் நடைபெற்ற தீபாவளி சந்தையில் 100 இந்தியர்கள் இலவசமாக வியாபாரம் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது.

சுமார் 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் இந்த தீபாவளி சந்தைக்கு வருகையை புரிந்து புத்தாடைகளை வாங்கிச் சென்றார்கள்.

பொதுமக்களை மகிழ்ச்சி படுத்தவும் சிறுவர்கள் குறிப்பாக தமிழ்ப் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் முறையில் பல போட்டிகள் நடத்தப்பட்டன.

நாடறிந்த கலைஞர் முகேஷ் ராவ் உட்பட உள்ளூர் கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த தீபாவளி சந்தையில் கலைஞர்களை வைத்துக்கொண்டு கூத்தடிக்கிறார்கள் என்று ஒரு அரசியல் கோமாளி சமூக வலைத்தளங்களில் பேசியிருந்தார்.

இந்திய தொழில் முனைவர்களை உருவாக்கி இருக்கும் ஐ சிட் திட்டத்தின் மூலம் 100 இந்தியர்கள் வியாபாரம் செய்வதற்கு சிலாங்கூர் அரசு பேருதவி புரிந்துள்ளது.

ஆனால் அரசியலில் அரை வேக்காடாக விளங்கும் ஒரு அரசியல் கோமாளி இந்த தீபாவளி சந்தையில் கூத்தடிக்கிறார்கள் என்று வாய் கூசாமல் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது.

இந்த அரசியல் கோமாளி பேச்சையெல்லாம் இந்தியர்கள் நம்ப மாட்டார்கள் என்று ஷா ஆலம் கவுன்சிலர் ராயூடு, கிள்ளான் கவுன்சிலர் யுவராஜா, சிலாங்கூர் இந்தியர் குரல் தலைவர் மணிமாறன் மற்றும் மலேசியா இந்தியர் குரல் தேசிய துணை செயலாளர் தேவன் ஆகியோர் குறிப்பிட்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles