
அரசாங்கம் நாடாளுமன்றத்தை கலைத்து விட்டது. இதனால் வெள்ள காலத்தின் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாடு உள்ளது.
எங்களுக்கு வேறு வழியில்லை, ஆனால் திறமையான மற்றும் வலிமையான மலேசியாவை உருவாக்குவதில் தெளிவான மனப்பான்மை, தைரியம் மற்றும் அர்ப்பணிப்புடன் தொடர்ந்து இருக்க வேண்டும்.
நிலையான, வளமான எதிர்காலத்தையும், மக்களின் தலைவிதி மற்றும் நலனில் உண்மையான அக்கறையும் கருணையும் கொண்ட ஒரு அரசாங்கத்தை மக்கள் தேர்வு செய்ய வேண்டும்.
அது பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கமாக இருக்க மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்று கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஊழல் இல்லாத ஆட்சி மலரும் வகையில் மலேசியர்கள் பக்கத்தான் ஹரப்பானை தேர்வு செய்ய வேண்டும் என்றார்.

