பொதுத் தேர்தலை சந்திக்க ஜசெக தேர்தல் இயந்திரம் தீவிரப்படுத்தப்படும்

நாட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதால், பொதுத் தேர்தல்கள் எதிர்காலத்தில் நடத்துவதற்கு ஏற்றதல்ல என்ற நிலைப்பாட்டை நாங்கள் பலமுறை கூறியுள்ளோம்,

இருப்பினும் அரசியலமைப்பு சட்டத்தின் படி எடுக்கப்பட்ட முடிவை ஜசெக மதிக்கிறது.

எனவே, பிரச்சாரத்தை எதிர்கொள்ள அனைத்து ஜசெக தேர்தல் இயந்திரங்களும் உடனடியாக செயல்படுத்தப்படும் என்று ஜசெக தலைமை செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

ஜசெக மத்திய உச்சமன்ற கூட்டம் இன்று செவ்வாய்கிழமை நடைபெறுகிறது.

பொதுத் தேர்தலை எதிர்கொள்ள கட்சியின் பிரச்சாரங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

பினாங்கு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றங்களை கலைக்காத பக்காத்தான் ஹராப்பான் தலைவர் மன்றத்தின் முடிவை ஜசெக தொடர்ந்து ஆதரிக்கும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles