சந்தையை விரிவுபடுத்தும் தளமாக இந்திய தொழில் முனைவோர் தீபாவளி சந்தை விளங்கியது

ஐ-சீட் எனப்படும் இந்திய சமூக மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு இலாகா வாயிலாக முதன் முறையாக இங்கு ஏற்பாடு செய்யப்பட்ட இந்திய தொழில்முனைவோர் வர்த்தக பெருவிழா சுமார் 100 சிறுதொழில் வர்த்தகர்கள் தங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்குரிய தளமாக அமைந்தது.

அதோடு மட்டுமின்றி தங்கள் வர்த்தகத்தை மேலும் பெரிய அளவில் விரிவுபடுத்துவதற்குரிய வாய்ப்பினையும் அதன் பங்கேற்பாளர்களுக்கு இந்த மூன்று நாள் விற்பனை விழா ஏற்படுத்தி தந்துள்ளதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

இந்திய தொழில்முனைவோருக்கு அவர்களுக்கும் தேவையான வர்த்தக உபகரணங்களை வழங்கும் நோக்கிலான இந்த ஐ.-சீட் திட்டம் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டது.

ஐ சீட் திட்டத்தின் மூலம் ஏராளமான இந்தியர்கள் நன்மை அடைந்து வருகிறார்கள் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles