
எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இப்போது காஜாங் சிறையில் 12 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
இவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற தீர்மானம் ம இகா தேசிய பொதுப் பேரவையில் முன் வைக்கப்படவில்லை என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ எஸ் ஏ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
நஜிப் துன் ரசாக் விடுதலை செய்யப் பட வேண்டும் என்று ம இகா மாநாட்டில் தீர்மானம் முன் வைக்கப்பட்டதாக இணையத் தளத்தில் செய்தி வெளியாகி உள்ளது.
இப்படி ஒரு தீர்மானம் முன் வைக்கப்படவில்லை என்று அவர் உறுதிப்படுத்தினார்.

