
பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் பேராக் மற்றும் பெர்லிஸ் மாநில சட்டமன்றங்கள் கலைக்கப்பட உள்ளன.
பேராக் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரணி முகமட் மற்றும் பெர்லிஸ் மாநில மந்திரி பெசார் அஸ்லான் மான் கூறுகையில் சட்டமன்றங்கள் கலைப்பது தொடர்பில் சுல்தானின் அங்கீகாரம் பெறப்படும் என்று தெரிவித்தனர்.
பெர்லிஸ், பகாங், பேராக் மாநிலங்கள் தேசிய முன்னணி வசம் உள்ளது.
பினாங்கு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்கள் பக்கத்தான் ஹரப்பான் வசம் உள்ளது.
கெடா, கிளாந்தான் மற்றும் திரெங்கானு மாநிலங்கள் பாஸ் கட்சி வசம் இருக்கிறது.

