பொதுத் தேர்தலில் போட்டியிட தயார்!
ஐபிஎப் கட்சி அறிவிப்பு

வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிடத் தயாராக இருப்பதாக ஐபிஎப் கட்சி அறிவித்துள்ளது.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தேசிய முன்னணியை ஐபிஎப் ஆதாரித்து வருகிறது.

அந்த வகையில் மிக விரைவில் நடைபெறவிருக்கும் பொது தேர்தலில் தொகுதி வழங்கப்படுமானால் போட்டியிட தயாராக இருக்கிறோம் என்று ஐபிஎப் கட்சி தலைவர் டத்தோ து. லோகநாதன் தெரிவித்தார்.

தேசிய முன்னணியை ஆதரிக்கும் எங்களைப் போன்ற கட்சிகளுக்கு கண்டிப்பாக தொகுதிகள் வழங்கப்பட வேண்டும்.

தேசிய முன்னணி நண்பர்களாக நாங்கள் இருக்கிறோம். பல ஆண்டுகளாக உழைத்து வருகிறோம்.

எங்களையும் அங்கீகரிக்கும் வகையில் கண்டிப்பாக தொகுதி வழங்கப்பட வேண்டும் என டத்தோ லோகநாதன் சுட்டி காட்டினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐபிஎப் கட்சி தலைமையகத்தில் தீபாவளி இன்னிசை விழா நடைபெற்றது.

ஐபிஎப் கட்சியின் முன்னாள் தலைவர் டத்தோ சம்பந்தனின் துணைவியார் டத்தின் ஜெயலெட்சுமி, கட்சி தலைமை செயலாளர் மோகன், இளைஞர் பகுதி தலைவர் கணேஷ் சம்பந்தன், மகளிர் அணி தலைவி ராஜாம்மா, பொருளாளர் சுப்பிரமணியம், டத்தோஸ்ரீ
வனத்தையா மற்றும் டயானா கேட்டரிங் உரிமையாளர் சாமி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles