
கடந்த பொதுத் தேர்தலில் பத்து நாடாளுமன்றத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரபாகரன் பின்னர் கெஅடிலான் கட்சியில் இணைந்தார்.
பத்து தொகுதியில் 47,000 மலாய் வாக்காளர்கள், 35,000 சீனர் வாக்காளர்கள் மற்றும் 17,000 இந்திய வாக்காளர்கள் உள்ளனர்.
கெஅடிலான் கட்சி சார்பில் பிரபாகரன் போட்டியிடும் வேளையில் தேசிய முன்னணி சார்பில் அம்னோவும் பெரிக்கத்தான் சார்பில் பாஸ் கட்சியும் போட்டியிடுகிறது.
பத்து நாடாளுமன்ற தொகுதியில் பிரபாகரன் மீண்டும் வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
பத்து நாடாளுமன்ற தொகுதியில் உள்ள மக்களுக்கு பிரபாகரன் சிறந்த முறையில் சேவையாற்றி இருப்பதால் அவரின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது

