
பதினைந்தாவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள பக்கத்தான் ஹரப்பான் தயாராக உள்ளதோடு கடந்த 2018 ஆம் ஆண்டில் மக்கள் கொடுத்த ஆதரவை மீண்டும் பெறுவதற்கு தயாராகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவருமான அவர் குறிப்பிட்டார்.
வளமான எதிர்காலம் மற்றும் சுபிட்சத்தையும் மக்கள் நலன் மீது உண்மையான அக்கறையும் கொண்ட ஒரு அரசாங்கத்தை உருவாக்க நாங்கள் தயாராகி விட்டோம்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்பட்டாலும் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் வசமிருக்கும் சிலாங்கூர், பினாங்கு மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநில சட்டமன்றங்கள் கலைக்கப்படாது .
ஊழல்வாதிகள் மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்க மலேசியர்கள் துணிந்து வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

