
ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற மலேசிய இந்திய முப்படை ராணுவ வீரர்களின் அலுவலகம் திறப்பு விழா கண்டிருக்கிறது.
செர்டாங் ஸ்ரீ கெம்பாங்கான் இக்யூனி பார்க் பகுதியில் இந்த அலுவலகம் முறையாக திறப்பு விழா கண்டது.
மலேசிய இந்தியர் முன்னாள் முப்படை
வீரர்கள் சங்கத்தின் தலைவர் யாங் பஹாகியா டாக்டர் தனபாலன் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா சிறப்பு வருகை புரிந்து 3,000 வெள்ளி வழங்கி உதவி புரிந்தார்.

சுங்கை ரமால் சட்டமன்ற உறுப்பினர் மஸ்வான் தனது சார்பில் 2,000 வெள்ளி வழங்கினார்.
பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ மற்றும் கவுன்சிலர் அன்பரசன் ஆகியோரும் இந்த அலுவலகம் வாங்குவதற்கு நிதியுதவி புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

