

ஜெனிவா, ஜூன் 13-
சமூக நீதியை முன்னேற்றுதல் என்ற சர்வதேச தொழிலாளர் மாநாட்டு டைரக்டர் ஜெனரலின் அறிக்கையை மலேசியா முழுமையாக ஆதரிக்கிறது என்று மனிதவள அமைச்சர் வ.சிவகுமார் தெரிவித்தார்.
சமூக நீதியை ஆதரிப்பதில் அடிப்படை தொழிலாளர் கொள்கைகள் மற்றும் வேலை செய்யும் உரிமைகளை நிலைநிறுத்துவதன் அனைத்து முக்கியத்துவத்தையும் மலேசியா எதிரொலிக்கிறது.
தொழிலாளர் பாதுகாப்பை மேம்படுத்துவதிலும், பல்வேறு முயற்சிகள் மூலம் கண்ணியமான வேலையை ஊக்குவிப்பதிலும் மலேசியா உறுதியாக உள்ளது என்றார் அவர்.
மலேசியாவின் வேலை வாய்ப்புச் சட்டம் 1955 (Malaysia’s Employment Act 1955) திருத்தப்பட்டு
1 ஜனவரி 2023 முதல் நடைமுறைக்கு வந்தது.
வேலைப் பிரச்சனைகள் தொடர்பான எந்தவொரு பாகுபாட்டையும் எதிர்த்துப் போராடுவதற்கும் தடை செய்வதற்கும் மலேசிய முன் வந்துள்ளது.
.
கட்டாய உழைப்பைத் தடை செய்வதற்கான புதிய விதி தொடர்பான சர்வதேச தொழிலாளர் மாநாட்டு உடன்படிக்கைக்கு 2022 மார்ச் 21 அன்று மலேசியா ஒப்புதல் அளித்தது.
1930 ஆம் ஆண்டு கட்டாய தொழிலாளர் மாநாட்டின் 2014 நெறிமுறைக்கு ஏற்ப இந்த ஏற்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது என்று அவர் சொன்னார்.
சுவிட்சர்லாந்து ஜெனிவாவில் நடைபெறும் சர்வதேச தொழிலாளர்கள் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் மனிதவள அமைச்சர் சிவகுமார் இன்று பன்னாட்டு உலகத் தலைவர்கள், தொழிற்சங்கவாதிகள் மத்தியில் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் அ.சிவநேசன், மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தலைவர் முகமட் எப்பெண்டி, மலேசிய முதலாளிகள் சம்மேளனத்தின் உதவித் தலைவர் முகமட் சுக்ரி உட்பட அமைச்சின் உயர் அதிகாரிகள் இந்த பன்னாட்டு மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

