சுக்மாவில் சிலம்பம் – கபடி இடம் பெறபோராடிய மனிதவளஅமைச்சர் சிவகுமார் பாராட்டுக்குரியவர்! மலேசிய கபடி சங்கத் தலைவர் சதாசிவம் புகழாரம்

சுங்கை பட்டாணி, ஜூன் 13-
வரும் 2024 இல் சரவாக் சுக்மாவில் கபடி மற்றும் சிலம்பம் இடம் பெற்றுள்ளது மலேசிய கபடிச் சங்கத்திற்கு மிகப் பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது என்று மலேசிய கபடி சங்கத்தின் தலைவர் சதாசிவம் தெரிவித்தார்.

இந்தியர்களின் பாரம்பரிய போட்டிகளான சிலம்பம் மற்றும் கபடி சுக்மாவில் இடம் பெற மனிதவள அமைச்சர் சிவகுமார் பெரும் முயற்சிகளை மேற்கொண்டார்.

இவ்வேளையில்
மனிதவள அமைச்சர் வி. சிவக்குமாருக்கு ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.

இந்தியர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடியும், சிலம்பமும் சரவா சுக்மாவில் இடம் பெறாது என முதலில் கூறப்பட்டபோது கடுமையான ஆட்சேபம் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து மனிதவள அமைச்சர் சிவக்குமார் சிலம்பம மற்றும் கபடி சங்கத் தலைவர்களை அழைத்து சென்று
இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் சிலம்பம் மற்றும் கபடி சுக்மாவில் இடம் பெறுகிறது என்று ஹன்னா இயோ நேற்று இனிப்பான செய்தியை அறிவித்தார்.

இந்த அறிவிப்பு மலேசிய கபடி சங்கத்திற்கு மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிக்கிறது என்று சதாசிவம் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles