

கோலாலம்பூர் ஜூன் 14-
2024 சரவாக் சுக்மாவில் சிலம்பம் – கபடி இடம் பெறுதற்கு
மனிதவள
அமைச்சர் வ. சிவகுமார் எடுத்து கொண்ட முயற்சிகளை பெரிதும் பாராட்டுவதாக மலேசிய சிலம்பக் கழகத்தின் நிரந்தர தலைவர் டத்தோ வி.எல். காந்தன் தெரிவித்தார்.
இந்நாட்டில் மலேசிய சிலம்பக் கழகத்தை தோற்றுவித்த பெருமை டத்தோ வி.எல்.காந்தனை சேரும்.
அந்த வகையில் சரவாக் சுக்மா போட்டியில் சிலம்பம் மற்றும் கபடி இடம் பெற்றுள்ள செய்தி தமக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அவர் கூறினார்.
இந்தியர்களின் குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய போட்டிகளான சிலம்பம் மற்றும் கபடி சுக்மாவில் இடம் பெற மனிதவள அமைச்சர் சிவகுமார் பெரும் முயற்சிகளை மேற்கொண்டார் என்பதை மறுக்க முடியாது.
இவ்வேளையில்
மனிதவள அமைச்சர் வி. சிவக்குமாருக்கு ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று டத்தோ வி.எல். காந்தன் தெரிவித்தார்.
கபடியும், சிலம்பமும் சரவா சுக்மாவில் இடம் பெறாது என முதலில் கூறப்பட்டபோது கடுமையான ஆட்சேபம் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து மனிதவள அமைச்சர் சிவக்குமார் மலேசிய சிலம்பக் கழகத்தின் தேசிய தலைவர் ஏ.விஸ்வலிங்கம் மற்றும் கபடி சங்கத் தலைவர் சதாசிவம் ஆகியோரை அழைத்து சென்று
இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதை மறுக்க முடியாது.
துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தலைமையில் நடைபெற்ற விளையாட்டு மன்ற கூட்டத்திலும் இவ்விரு போட்டிகள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் வலியுறுத்தினார்.
இந்நிலையில் சிலம்பம் மற்றும் கபடி சுக்மாவில் இடம் பெறுகிறது என்று ஹன்னா இயோவின் இனிப்பான செய்தி பெரும் உற்சாகத்தை அளிக்கிறது.
மனிதவள அமைச்சர் சிவகுமார் போராடி பெற்றுத் தந்த இந்த அரிய வாய்ப்பை மலேசிய சிலம்பக் கழகமும் மலேசிய கபடி சங்கமும் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இனி ஒவ்வொரு ஆண்டும் சுக்மா போட்டியில் பதக்கத்திற்குரிய போட்டியாக இவ்விரு போட்டிகளும் விளங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

