

ஜெனிவா, ஜூன் 14-
கண்ணியமான முறையில் சமூக நீதியை ஊக்குவித்தல் கருப்பொருளுடன் கட்டாய உழைப்பை தடுக்கவும் ஒழிக்கவும் மலேசிய உறுதி அளித்துள்ளது என்று ஜெனிவாவில் நடைபெறும் சர்வதேச தொழிலாளர்கள் உச்சநிலை மாநாட்டில் மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் அறிவித்தார்.
சுவிட்சர்லாந்து ஜெனிவாவில் நடைபெறும் சர்வதேச தொழிலாளர்கள் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் மனிதவள அமைச்சர் சிவகுமார் இன்று ஆசியா பசிபிக் அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றினார்.
தொழிலாளர்களை மேம்படுத்துவதில் முன்னேற்றத்தின் ஒரு பகுதியாக மலேசிய அரச உரிமைகள் மற்றும் சிறந்த சமூக பாதுகாப்பபை
அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கி வருகிறது.
மலேசியா வேலை வாய்ப்புச் சட்டம் 1955 -ஐ திருத்தியுள்ளது.
இவ்வாண்டு
ஜனவரி 1 ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வந்துள்ளது.
தொழிலாளர்கள் மத்தியில் பாகுபாடு காட்டுவதைத் தடை செய்வதற்கான
எந்தவொரு பாகுபாட்டையும் எதிர்த்துப் போராடவும் தடை செய்யவும் மலேசிய முன் வந்துள்ளது.
ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதிலும், அனைவரையும் உள்ளடக்கிய சமூகப் பாதுகாப்பை வழங்குவதிலும், மலேசியா 1 ஜனவரி 2019 முதல் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு காயங்களுக்கான சமூகப் பாதுகாப்புப் பாதுகாப்புத் திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது.
கட்டாய உழைப்பைத் தடுக்கவும். ஒழிக்கவும் மலேசியா உறுதியளித்துள்ளது என்று அவர் சொன்னார்.
முதலாளிகளுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் மற்றும்
தொழிலாளர் அமைப்புடன் மலேசிய அரசு நெருக்கமாக செயல்படுகிறது
மலேசிய முதலாளிகள் கூட்டமைப்பு (MEF) மற்றும் மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (MTUC) இணைந்து முக்கிய தொழில் துறைக்கு தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் சொன்னார்.
இன்று நடைபெற்ற முக்கிய கூட்டத்தில் பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் அ. சிவநேசன் உட்பட ஆசிய பசிபிக் நாடுகளை சேர்ந்த அமைச்சர்கள், தொழிற்சங்க தலைவர்கள் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

