டுனெடின் ரேஞ்சர்ஸ் ஏற்பாட்டில் பெனால்டி கிக் போட்டி: செமினி பெமூடா ஐ.பி.எப். அணி வாகை சூடியது

டுனெடின் ரேஞ்சர்ஸ் ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பெனால்டி கிக் போட்டியில் மடானி கிண்ணத்தை செமினி ஐ.பி.எப். பெமூடா அணி வாகை சூடியது.
அவ்வணிக்கு வெ.4,000 ரொக்கம், கிண்ணம் மற்றும் பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டன.
இரண்டாவதாக வென்ற எஸ்.எஸ்.புத்ரா அணிக்கு வெ.1,500 ரொக்கம் மற்றும் பதக்கமும் வழங்கப்பட்டன.
மூன்றாவதாக வென்ற அஜீத் ரசிகர் மன்றக் குழுவிற்கு வெ.750 ரொக்கம் மற்றும் பதக்கமும் வழங்கப்பட்டன. நான்காவதாக வென்ற வெஸ்ட் கன்ட்ரிக்கு வெ.500 ரொக்கம் வழங்கப்பட்ட வேளையில், 5 முதல் 8ஆம் நிலையில் வென்ற குழுக்களுக்கு வெ.100 ரொக்கம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சிறந்த விளையாட்டாளராக எஸ்.எஸ்.புத்ராவைச் அடாம், சிறந்த கோல் காவலராக பெமூடா ஐ.பி.எப். செமினியைச் சேர்ந்த முருகா பரிசுகள் வழங்கி சிறப்புச் செய்யப்பட்டன.
இந்நிகழ்ச்சியை உலு லாங்காட் நாடாளுமன்ற உறுப்பினர், முகமட் சானி ஹம்சானின் சிறப்பு அதிகாரி மற்றும் பி.கே.ஆர். உலு லாங்காட் தொகுதித் தலைவர், இராஜன் முனுசாமி ஆகியோர் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தனர்.
இந்த நிகழ்வு காஜாங் நகராண்மைக் கழகத்தைச் சேர்ந்த சந்திரன் இராமசாமி அவர்களின் ஆதரவுடன் நடத்தப்பட்டது.
இறுதியாக இந்நிகழ்வை மேலவை உறுப்பினர், செனட்டர் டத்தோ டாக்டர் நெல்சன் ரெங்கநாதன், இராஜன் முனுசாமி, ம.இ.கா. உலு லாங்காட் தொகுதித் தலைவர் டாக்டர் வீ. செல்வராஜா ஆகியோர் இணைந்து நிறைவுச் செய்தனர்.
இந்த நிகழ்வுக்கு ஆதரவு வழங்கிய மந்திரி புசார், டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்களுக்கு இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நிகழ்வுக்கு வெ.5,000 நிதியுதவி பி.கே.ஆர். உலு லாங்காட் தொகுதித் தலைவர், இராஜன் முனுசாமி அவர்களின் முயற்சியினால் பெறப்பட்டது. இவ்வேளையில் திரு.இராஜன் அவர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ரவி முனியாண்டி தெரிவித்தார்.
இவ்வேளையில், நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர், ரவி அவர்களின் தந்தை திரு.முனியாண்டி அவர்களுக்கு இராஜன் முனுசாமி அவர்கள் சிறப்புச் செய்தார்.
இந்த நிகழ்வுக்கு ஆதரவு வழங்கிய தொழிலதிபர் டத்தோஸ்ரீ டாக்டர் வனத்தியா அந்தோணி, மைபிபிபி உலு லாங்காட் தொகுதித் தலைவர் சுரேன், ம.இ.கா. உலு லங்காட் தொகுதித் தலைவர் டாக்டர் வீ.செல்வராஜா, பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் சுப்ரமணியம் வேலு, செமினி தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர், ஜெயபாலன் லெட்சுமணன், ஐ.பி.எப். இளைஞர் பிரிவுத் தலைவர் கணேஷ் குமார், காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர்களான சந்திரன் இராமசாமி, இராமச்சந்திரன் அர்ச்சுனன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த நிகழ்ச்சியில் ம.இ.கா. மத்திய செயலவை உறுப்பினர் சிவசுப்ரமணியம் அவர்களும் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் டுனெடின் ரேஞ்சர்ஸ் செயற்குழு உறுப்பினர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது. அதன் தலைவர் கருணாதுரை, துணைத் தலைவர் பாஸ்கரன், செயலாளர் ஜெயகுமார், துணைச் செயலாளர் ரவி அமாவாசை, பொருளாளர சந்திரபோஸ், செயற்குழு உறுப்பினர்கள் ஜோன்சன், கணேசா, விஜயசிங்கம் மற்றும் தாஸ் ஆகியோருக்கு வழங்கப்பட்டதாக இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர், ரவி முனியாண்டி தெரிவித்தார்.
அதே வேளையில், இந்நிகழ்ச்சியைக் காலை தொடங்கி வழிநடத்திய ஆசிரியர் திரு.டேவிட், பீ.ஏ.சிஸ்டம் திரு.சிவா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக ரவி முனியாண்டி குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles