

ஜெனிவா, ஜூன் 15-
கட்டாய உழைப்பைத் தடுக்க – ஒழிக்க மற்றும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பை வழங்க மலேசிய மேற்கொண்டிருக்கும் முன் முயற்சிகளுக்கு ஜெனிவா சர்வதேச தொழிலாளர்கள் உச்சநிலை மாநாட்டில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்திருப்பதாக மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
தொழிலாளர்களுக்கு நியாயமான பாதுகாப்பை வழங்க மலேசியா பல முன் முயற்சிகளை செயல்படுத்தி கொண்டிருக்கிறது என்றார் அவர்.
சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் மாநாட்டின் (ஐஎல்சி) 111ஆவது அமர்வில் பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், தொழிற்சங்கவாதிகள் மத்தியில் மனிதவள அமைச்சர் சிவகுமார் ஆற்றிய உரை பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மலேசியாவில் வேலைச் சட்டம் 1955 இல் திருத்தம், சட்டம் 446 இல் திருத்தம், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்துதல் உட்பட செயல்படுத்தப்பட்ட சில முயற்சிகளையும் மனிதவள அமைச்சர் சிவகுமார் தமது உரையில் சுட்டிக் காட்டினார்.
வேலை பேரிடர் திட்டம்., காலநிலை மாற்றம் மற்றும் பசுமைப் பொருளாதாரத்தை அனுபவிக்கும் தொழிலாளர்களுக்கு நியாயமான என்ற தேசியக் கொள்கையின் முக்கியத்துவத்தையும் அமைச்சர் சிவகுமார் வலியுறுத்தினார்.
நேற்று மாலையில் நடைபெற்ற ஆசியான் தொழிலாளர் அமைச்சர்களின் கூட்டத்தில் மனிதவள அமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஆசியான் தலைவராக இந்தோனேசியா 111ஆவது ILC கூட்டத்தை ஏற்று நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டத்தில், ஆசியான் அமைச்சர்கள் சமூக நீதி, நியாயமான மாற்றம் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குதல் குறித்து கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

