
விரைவில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் தெலுக் இந்தான் நாடாளுமன்ற தொகுதியில் பிரபல வழக்கறிஞர் சிவநேசனை களத்தில் இறக்குவதற்கு ஜசெக வியூகம் வகுத்துள்ளது.
கடந்த மூன்று பொதுத் தேர்தலில் சுங்கை சட்டமன்ற தொகுதியில் அபார வெற்றி பெற்ற வழக்கறிஞர் சிவநேசன் இம்முறை தெலுக் இந்தான் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட ஆயத்தமாகி வருகிறார்.
நாட்டில் பல வழக்குகளில் வாதாடி வெற்றி பெற்றவர் வழக்கறிஞர் சிவநேசன் ஆவார்.
மலேசியர்கள் மத்தியில் நன்கு அறிமுகமான இவர் தெலுக் இந்தானில் போட்டியிட்டால் வெற்றி பெறும் வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது.
தற்போது தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஙா கோர் மிங் வேறு தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.