சாலை விபத்தில் உயிரிழந்த Che Aziz குடும்பத்திற்கும் கண்பார்வை இழந்த கைரூடினுக்கும் சொக்சோ நிதியுதவியை வழங்கி உதவி புரிந்தார் மனிதவள அமைச்சர் சிவகுமார் !

கோலத்திரெங்கானு, ஜூன் 20-
திரெங்கானு மாநிலத்திற்கு வருகை புரிந்திருக்கும் மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் இன்று இரு குடும்பங்களை நேரில் சந்தித்து சமூக நல நிதியுதவியை வழங்கி பேருதவி புரிந்தார்.

சாலை விபத்தில்
உயிரிழந்த ஒரு தொழிலாளியான Che Aziz Che Nik மனைவி மற்றும் பிள்ளைகளை நேரில் சந்தித்த மனிதவள அமைச்சர் சிவகுமார் தமது சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொண்டார் .

ஒரு கட்டுமானத் தொழிலாளியான இவரின் மறைவு அவரின் குடும்பத்திற்கு பேரிழப்பாகும்.

சொக்சோ நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும்
மாதாந்திர உதவித்தொகை
இவரின் குடும்பத்திற்கு பேருதவியாக இருக்கும் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

Che Aziz குடும்பத்திற்கு மின்னல் வேகத்தில் உதவிகள் வழங்க ஏற்பாடுகளை செய்த Skuad PERKESO Prihatin Terengganu அணியை பெரிதும் பாராட்டுகிறேன்.

Che Aziz Che Nik க்கு நேர்ந்த விபத்து பற்றி
Viral Media Terengganu அகப்பகத்திற்கு காத்திருக்காமல் உடனடியாக இறந்தவரின் குடும்பத்தை தொடர்பு கொண்டு உதவிகள் வழங்கியது பாராட்டுக்குரியது என்றார் அவர்.

மற்றொரு SOCSO சந்தாதாரரான Khairudin Salleh இளைஞரின் அவல நிலை குறித்தும் நான் கவலைபடுகிறேன்.

INSTEP Batu Rakit இன் முன்னாள் தொழில்நுட்ப வல்லுநரான அவருக்கு 32 வயதுதான். இன்னும் திருமணம் ஆகவில்லை.

இப்போது அவரின் இரத்தத்தில் கடுமையான தொற்று காரணமாக படுத்த படுக்கையாக உள்ளார்.

நரம்பு மற்றும் மூட்டு வலியால் நினைவாற்றல் குறைபாடுகளினால் அவதிப்படுகிறார்.

நோயின் விளைவாக குடும்பத்தின் நிலையான கவனிப்பு அவருக்கு தேவைப்படுகிறது.

கடந்த ஆண்டு, டாக்டர்கள் மருத்துவ பரிசோதனையில் கைருடின் பார்வையற்றவர் என்பதை உறுதிப்படுத்தினர்.

அவருக்கு மாதந்தோறும்
SOCSO ஓய்வூதியமும் டயப்பர்கள், பால் போன்ற சில மீட்புக் கருவிகளும் இன்று வழங்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles