ஸ்ரீ மகா மாரியம்மன் தாய்க்கோவில் மகா கும்பாபிஷேகம் சீரும் சிறப்புடன் நடைபெற மனிதவள அமைச்சர் சிவகுமார் வாழத்து!

புத்ரா ஜெயா ஜூன் 23-
மலேசிய திருநாட்டில் தாய்க்கோவிலாக விளங்கி கொண்டிருக்கும் கோலாலம்பூர் ஜாலான் பண்டார் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக நன்னீராட்டு பெருவிழா வரும் ஜூன் 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில் மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது.

ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர். நடராஜா தலைமையில் நடைபெறும் மகா கும்பாபிஷேகம் சீரும் சிறப்புடன் நடைபெற மனதார வாழ்த்துகிறேன் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் உலக திருத்தலங்களில் ஒரு புகழ்பெற்ற கோவிலாக விளங்குகிறது.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பாபிஷேக நன்னீராட்டு பெருவிழா நடைபெறுகிறது.

அந்த வகையில் வரும் ஞாயிறன்று நடைபெறும் மகா கும்பாபிஷேகத்திலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.

டான்ஸ்ரீ ஆர். நடராஜா தலைமையில் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம் தொடர்ந்து சமயப் பணிகள் ஆற்றிட மனதார வாழ்த்துகிறேன் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles