
அம்பாங், ஜூன் 24-
அம்பாங் தாமான் தாசேக் பெர்மாய் வட்டாரத்தில் அருள் பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நன்னீராட்டு பெருவிழா நாளை ஜூன் 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு மேல் மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது.
பல லட்சம் வெள்ளியில் கட்டப்பட்டு மிகவும் கம்பீரமாக காட்சி அளிக்கும் அம்பாங் தாசேக் பெர்மாய் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கிறார்கள்.
ஆகம முறைப்படி சிறப்பு யாகங்களுக்கு பிறகு மகா நன்னீராட்டு பெருவிழாவை சுபஸ்ரீ சேனாதிபதி சிவாச்சாரியார், சிவஸ்ரீ கணேசன் சிவச்சாரியார், சிவஸ்ரீ சரவணன் சிவச்சாரியார் ஆகியோர் நடத்தி வைப்பார்கள்.
தாசேக் பெர்மாய் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தலைவர் டத்தோ ஜீவராஜன் தலைமையில் நடைபெறும் மகா கும்பாபிஷேகத்தில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

