வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் முற்போக்கான ஊதிய மாதிரியை அரசாங்கம் கவனமாக ஆராயும்! மனிதவள அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

புத்ரா ஜெயா, ஜூலை 2-
முற்போக்கான சம்பள மாதிரியை (MODEL GAJI PROGRESIF) மறுபரிசீலனை செய்வதற்கான முன்மொழிவை செயல்படுத்துவதற்கு பொருத்தமான கால அவகாசம் தேவை என்பதை அரசாங்கம் அறிந்திருக்கிறது என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் தெரிவித்தார்.

வாழ்க்கைச் செலவு மற்றும் திறன் அதிகரிப்பால் அறிமுகப்படுத்தப்படும் முற்போக்கான ஊதியத்தை நடைமுறைப்படுத்து
வதில் தடைகள் இருப்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்கிறது என்று சிவக்குமார் குறிப்பிட்டார் .

அதன்படி, மலேசியர்களுக்கு இந்த முற்போக்கான சம்பள மாதிரியை அமல்படுத்துவதற்கு முன் அரசாங்கம் கவனமாக ஆய்வு செய்யும்” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களின் உற்பத்தித்திறன், திறன் மற்றும் அனுபவத்திற்கேற்ப ஊதியத்தை அவர்கள் அனுபவிக்கும் வகையில், தொழிலாளர்களைப் பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றார் சிவக்குமார்.

“அதே நேரத்தில், முதலாளிகள் உற்பத்தித்திறனையும் லாபத்தையும் பெற வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது.

எனவே, குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்துவதைத் தவிர, வேறு ஊதிய முறையை அரசு கவனிப்பதே பொருத்தமானது,” என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles