

கோலாலம்பூர் ஜூலை 2-
மலேசிய திருநாட்டில் தாய்க்கோவிலாக விளங்கி கொண்டிருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நன்னீராட்டு பெருவிழா கடந்த ஜூன் 25 ஆம் தேதி மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இப்போது 48 நாட்களுக்கு மண்டலாபிஷேக பூஜை நடைபெற்று வருகிறது.
நேற்று வைகாசி விசாக உபய நாட்டாமைகளின் 6 ஆம் நாள் மண்டலாபிஷேக பூஜை விமரிசையாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் அறங்காவலர்மற்றும் வைகாசி விசாக உபய அறங்காவலருமான பி.சந்திரசேகரன், உபய நாட்டாமை ஜி.பூபாலன் , உபய பிரதிநிதிகளான கே.கோவிந்த், கே,ஜெய கணேசன் ஆகியோர் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.
ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா – புவான்ஸ்ரீ மல்லிகா நடராஜா தம்பதியர், தேவஸ்தானத்தின் அறங்காவலர் கதிரேசன், செயலாளர் சேதுபதி, அறங்காவலர் டத்தோ கண்ணா சிவகுமார் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மண்டலாபிஷேக பூஜைக்கு பின்னர்
எஸ்பிஎம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் TNB ஓய்வு பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

