
சமூக சேவையில் அர்ப்பணிக்கும் மலேசியா ஸ்ரீ குழந்தை வடிவேலன் திருப்பணி சபா கடந்த ஜூன் மாதம் 24, 25ஆம் தேதிகளில் பெர்ஜாயா மெகா மோல் பேரங்காடியில் தங்களது 70ஆவது இரத்த தான முகாமை மலேசிய இரத்த வங்கி மற்றும் குவாந்தான் தெங்கு அம்புவான் அவ்சான் மருத்துவமனையுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
இரத்தக் கையிருப்புப் பற்றாக்குறை ஏற்படாமல் இரத்த வங்கிக்கு ஆதரவளிக்கும் வகையில் காஜாங், சிலாங்கூர் மாநிலத்தைத் தவிர மற்ற மாநிலங்களிலும் இதே போன்ற இரத்த தான முகாம்கள் ஏற்பாடு செய்யத் திட்டமிட்டதாக மலேசிய ஸ்ரீ குழந்தை வடிவேலன் திருப்பணி சபாவின் தேசியத் தலைவர், கலைமாமணி டாக்டர் பிரேம கண்ணன் தெரிவித்தார்.
இம்முகாமில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.
இரத்த வங்கிக்கு ஆதரவளிப்பதைக் கருத்தில் கொண்டு ஏற்பாடு செய்யும் இரத்த தான முகாமில் பொதுமக்களில் அதிகமானோர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்ய முன்வர வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார்.
தாங்கள் ஏற்பாடு செய்த இரத்த தான முகாமிற்கு ஆதரவளித்த குவாந்தான், பெர்ஜாயா மெகா மோல் அதன் நிர்வாகத்தினர் திருமதி ஜெனி, குவாந்தான் தெங்கு அம்புவான் அவ்சான் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் டாக்டர் அசுவாரா, டாக்டர் சாரிட், டாக்டர் மைசாரா, மருத்துவமனையின் துணை தகவல் அதிகாரி திரு அஸ்லி, தாதிகளுக்கும்,மலேசியஸஸ்ரீ குழந்தை வடிவேலன் திரப்பணி சபாவின் உறுப்பினர் மற்றும் இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. திருமதி ஜெகன் நளினி தம்பதியர், ஸ்குவாட்ஸ் மலேசியா உறுப்பினர்களுக்கும் சேவையாளர்களுக்கும் மலேசியா ஸ்ரீ குழந்தை வடிவேலன் திருப்பணி சபாவின் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்

