1 லட்சத்து 78 ஆயிரத்து 710 இல்லத்தரசிகள் SOCSO சமூக நல பாதுகாப்பில் பதிவு ! மனிதவள அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

கோலத்திரெங்கானு, ஜூலை 7-
இல்லத்தரசிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சொக்சோ சமூக நல பாதுகாப்பு திட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது

Skim Keselamatan Sosial Suri Rumah எனப்படும் சொக்சோ சமூக நல பாதுகாப்பு திட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 78 ஆயிரத்து 710 இல்லத்தரசிகள் தங்களைப் பதிந்து கொண்டுள்ளனர்.

திரெங்கானு மாநிலத்தில் மட்டும் 13 ஆயிரத்து 85 இல்லத்தரசிகள் இந்த திட்டத்தில் பங்கெடுத்து உள்ளனர் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் இன்று அறிவித்தார்.

திரெங்கானு மாநில அரசின் ஆதரவுடன் மனித வள அமைச்சின் கீழ் இயங்கும் சொக்சோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று கோலத் திரெங்கானுவில் வேலை வாய்ப்பு கண்காட்சி மற்றும் இல்லத்தரசிகள் சமூக நல பாதுகாப்பு திட்டத்தை மனிதவள அமைச்சர் சிவகுமார் தொடக்கி வைத்தார்.

இரு நாட்கள் நடைபெறும் இந்த நிழச்சியை மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்த சொக்சோ நிறுவனத்திற்கு மனித வள அமைச்சர் சிவகுமார் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இரு நாட்கள் நடைபெறும் இந்த வேலை வாய்ப்பு கண்காட்சியில் 5,000 வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தியுள்ளது.

80க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வேலை வாய்ப்புகளை வழங்க முன் வந்திருப்பது பாராட்டுக்குரியது என்றார் அவர்.

திரெங்கானு மக்களின்
வாழ்க்கைத் தரத்தை மாற்றுவதற்கு வழங்கப்பட்ட இந்த வாய்ப்பை மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

சொக்சோ நிறுவனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ சுபாஹான் கமால், சொக்சோ நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் அஸ்மான் உட்பட திரெங்கானு மாநில அரசு அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles