இந்திய தொழில் துறைகள் அந்நிய தொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பில் மனிதவள அமைச்சருடன் துணை அமைச்சர் சரஸ்வதி சந்திப்பு

புத்ரா ஜெயா ஜூலை 7-
இந்திய பாரம்பரிய தொழில் துறைகளான முடிதிருத்தும் நிலையங்கள் நகைக் கடைகள் மற்றும் டெக்ஸ்டைல்ஸ் ஆகியவை எதிர் நோக்கி இருக்கும் அந்நிய தொழிலாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பில் மனிதவள அமைச்சர் வ சிவகுமாருடன் கூட்டுறவு மேம்பாட்டு துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி முக்கிய சந்திப்பை நடத்தினார்.

புத்ரா ஜெயாவில் உள்ள மனிதவள அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு கூட்டத்தில் மனித அமைச்சர் சிவகுமார் உட்பட மனித வள அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

நகைக்கடைகள், முடித்திருத்தும் நிலையங்கள் மற்றும் டெக்ஸ்டைல்ஸ் துறைக்கு அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்வது ஏதுவாக மனித வள அமைச்சு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமிக்கு மனிதவள அமைச்சர் சிவகுமார் விளக்கினார்.

உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் மற்றும் உள்நாட்டு வாணிப வாழ்க்கை செலவின அமைச்சர் டத்தோஸ்ரீ சாலாவூடின் ஆயோப் ஆகியோருடன் இணைந்து நடத்தப்பட்ட குறித்தும் மனித வள சிவகுமார் விளக்கம் அளித்தார்.

அந்நிய தொழிலாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் வேளையில் அமைச்சரவை ஒப்புதல் பெறுவதற்கு ஏதுவாக இந்த விவகாரம் அமைச்சருக்கு கொண்டு செல்லப்படும் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார் .

மனிதவள அமைச்சர் சிவகுமார் வழங்கிய விளக்கத்திற்கு துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்த மூன்று துறைகளுக்கும் எவ்வளவு சீக்கிரத்தில் தீர்வு காண முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் தீர்வு காண தாமும் ஒத்துழைப்பு வழங்குவதாக துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles