11ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் தலைவராக மனிதவள அமைச்சர் வ.சிவகுமார் தேர்வு!

புத்ரா ஜெயா ஜூலை 8-
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம், ஓம்ஸ் அறவாரியம் ஆதரவில் இந்திய ஆய்வியல் துறை மலாயா பல்கலைக்கழகம் (கோலாலம்பூர்) இணைந்து நடத்தும் 11 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு வரும் ஜூலை 21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை மலாயா பல்கலைக்கழகத்தில் வேந்தர் அரங்கில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.

இம்முறை உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் தலைவராக மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஆசியோடு உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் தலைவராக மனிதவள அமைச்சர் சிவகுமார் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவரின் தலைமையில் நடைபெறும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு புதிய வரலாறு படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் இணைத் தலைவராக தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம் சரவணன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இதற்கு முன்னர் மூன்று முறை உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளை நடத்திய பெருமை மலேசியாவுக்கு இருக்கிறது.

இப்போது நான்காவது முறையாக உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை மலேசியா ஏற்று நடத்துவது வரலாறாகும்.

தமிழ் மொழியின் தொன்மை மற்றும் தனித்துவத்தை போன்றும் விதமாகவும் தமிழ் மொழி குறித்து உலகின் பல்வேறு நாடுகளில் மேற்கொண்டு வரும் ஆராய்ச்சிகளையும் கண்டுபிடிப்புகளையும் அதன் வளர்ச்சியை மேலும் உலக அளவில் பரப்பும் நோக்கத்தோடு நடத்தப்படும் இந்த மாநாட்டில் பல நாடுகளில் இருந்து 2,000 தமிழ் அறிஞர்கள் மற்றும் 1,000 பார்வையாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரும் ஜூலை 22 ஆம் தேதி மாலை 5.00 மணிக்கு உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles