பத்து காஜா நாடாளுமன்ற தொகுதியில் 300 குடும்பங்களுக்கு உணவு கூடைகளை வழங்கி பேருதவி புரிந்தார் மனிதவள அமைச்சர் சிவகுமார்

ஜெலாப்பாங், ஜூலை 8-
மனிதவள அமைச்சரும் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினருமான வ. சிவகுமார் இன்று தமது தொகுதியில் உள்ள பி-40 பிரிவைச் சேர்ந்த 300 குடும்பங்களுக்கு உணவு கூடைகளை வழங்கி பேருதவி புரிந்தார்.

பத்து காஜா நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜெலாப்பாங் மக்கள் சேவை மையத்தின் மூலம் வசதி குறைந்த மக்களுக்கு அவர் உதவிக் கரம் நீட்டினார்.

மனிதவள அமைச்சில் கடுமையான வேலை களுக்கு மத்தியில் பத்து காஜா தொகுதி மக்கள் பிரச்சனைகளுக்கும் அவர் நல்ல முறையில் தீர்வு கண்டு வருகிறார்.

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்களின் குறைகளையும் அவர் நேரில் கேட்டறிந்தார்.

தங்களுக்கு தக்க நேரத்தில் உதவிக் கரம் நீட்டிய மனிதவள அமைச்சருக்கு உணவு கூடைகளை பெற்றுக் கொண்ட மக்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

பத்து காஜா நாடாளுமன்ற தொகுதியில் மக்கள் எதிர்நோக்கி இருக்கும் பிரச்சனைகளுக்கு படிப்படியாக தீர்வு காண பாடுபடுவேன் என்றும் அவர் சொன்னார்.

மிகவும் விமரிசையாக நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு மனிதவள அமைச்சர் சிவகுமாருக்கு ஆதரவு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles