
கோத்தா கினபாலு, ஜூலை 9 –
சபா மற்றும் சரவாக் மக்களின் நலன் சமூக-பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை உள்ளடக்கிய மனித மூலதன முன்முயற்சிகளுக்கு அப்பால் மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் டத்தோஸ்ரீ ஹாஜஜி நூர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சபாவைப் பொறுத்தவரை, மனித மூலதனத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அதை நமது முக்கிய உந்துதல்களில் ஒன்றாகச் சேர்த்துக் கொண்ட எங்கள் வளர்ச்சிப் பாதை வரைபடமான For Sabah this is important இணக்கமான சமுதாயத்தை உருவாக்க முயற்சிப்பதால் இது முக்கியமானது என்றார் அவர்.
நாங்கள் செயல்படுத்திய பல்வேறு முன்முயற்சிகள் மூலம் பலம் மற்றும் மனித மூலதன திறன்களை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
“அதேபோல், இது நிலைத்தன்மை, செழிப்பு, புதுமை, மரியாதை, நம்பிக்கை, கவனிப்பு மற்றும் இரக்கம் ஆகிய மதானி கொள்கைகளிலும் தொகுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
இதனிடையே, சபாவில் நடைபெற்ற
HRD Corp தேசிய மனித மூலதன கண்காட்சியில்
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.
மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் HRD Corp நிறுவனத்தின் ஏற்பாட்டில் சபாவில் தேசிய மனித மூலதன மாநாடு @ கண்காட்சி மற்றும் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் வருகை தம்மை பெரும் வியப்பில் ஆழ்த்தியது என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்..
மனித மூலதனத் திட்டம் என்பது அதிக சமபங்கு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக மக்களிடம் மேலும் மேலும் சிறந்த முதலீடுகளை விரைவு படுத்துவதற்கான உலகளாவிய முயற்சியாகும்.
மனித மூலதனத்திற்கு முன்னுரிமை அளிக்கும் அரசாங்கங்களை இணைக்கவும், நிபுணத்துவத்தை மிகவும் தேவைப்படும் இடங்களில் சேர்ப்பதற்காகவும் மனித மூலதன திட்டத்தை HRD Corp வெற்றிகரமாக நடத்தி வருகிறது என்று அவர் சொன்னார்.
சபாவில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் HRD Corp நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ சாகுல் டாவூட் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

