இந்தியர்களின் முழுமையான ஆதரவுஒற்றுமை அரசாங்கத்திற்கு கிடைக்கும்! மனிதவள அமைச்சர் சிவகுமார் நம்பிக்கை

ஜெலாப்பாங், ஜூலை 9
ஆறு மாநில சட்டமன்றத் தேர்தலில் இந்தியர்களின் முழு ஆதரவு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு கிடைக்கும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் நம்பிக்கை தெரிவித்தார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிகமான இந்திய வாக்காளர்கள் நம்பிக்கை கூட்டணிக்கு வாக்களித்து வெற்றிபெற உதவினர்.

அந்த வகையில் ஆறு மாநில சட்டமன்றத் தேர்தலில் இந்தியர்களின் முழு ஆதரவு ஒற்றுமை அரசாங்கத்திற்கு கிடைக்கும் என்று
பத்துகாஜா நாடாளுமன்றத் தொகுதி ஜெலப்பாங் மக்கள் சேவை மையத்தின் சார்பில் 300 குடும்பங்களுக்கு உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டபோது பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் சிவகுமார் இவ்வாறு தெரிவித்தார்.

பினாங்கு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களை தக்கவைத்துக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

அதே சமயத்தில் பெரிக்கத்தான் நேஷனல் வசம் உள்ள கெடா மாநிலத்தை கைப்பற்ற நாம் கடுமையாக போராட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles