

கோலாலம்பூர் ஜூலை 18-
நாட்டில் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றாக விளங்கும் Oriental daily News சீனா பத்திரிகை அலுவலகத்திற்கு மனிதவள அமைச்சர் வ சிவகுமார் இன்று சிறப்பு வருகை புரிந்தார்.
Oriental daily News பத்திரிகை தலைமை நிர்வாக ஆசிரியர் Yung Chea ling மற்றும் ஆசிரியர் பிரிவு இயக்குநர் Patrick ting ஆகியோர் Oriental daily News பத்திரிகை செய்திகள் குறித்து மனிதவள அமைச்சருக்கு விளக்கம் அளித்தனர்.
சபா, சரவாக் மற்றும் புரூணை ஆகிய பகுதிகளுக்கு அதிக அளவில் Oriental daily News பத்திரிகை அதிக அளவில் விற்பனையாகிறது.
மேலும் தீபகற்ப மலேசியாவில் அதிகமான வாசகர்களையும் கொண்டிருக்கிறது.
நாட்டில் ஏற்பட்ட கோவிட் 19 தாக்கத்தினால் பத்திரிகை விற்பனை அதிக அளவில் பாதிக்கப்பட்டது.
இப்போது ஆன்லைன் இணையத்தளமாக Oriental daily News பத்திரிகை வெளிவந்து கொண்டிருக்கிறது.
இணையம் வழி லட்சக்கணக்கான வாசகர்களையும் oreintal daily News paper கொண்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
தமது அரசியல் வாழ்க்கைக்கு அனைத்து மொழி பத்திரிகைகள் முழு ஆதரவு வழங்கிய இருப்பதாக மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.
இதில் oreintal daily News paper ஒன்றாகும் என்று அவர் சொன்னார்.

