மலேசியாவிலும் தமிழ்ப் பள்ளிகளுக்கு அங்கீகாரம்! காலத்தால் என்றென்றும் அழியாத செழுமை வாய்ந்த மொழி தமிழ் மொழியாகும்…அமைச்சர் சிவகுமார் பெருமிதம்

23 ஜூலை 2023 – ஓம்ஸ் அறவாரியம், உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம்
மற்றும் இந்திய ஆய்வியல் துறை மலாயா பல்கலைக்கழகம் இணைந்து
நடத்தும் 11 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிறந்த முறையில்
வெற்றி பெற எமது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்
கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த வெற்றி பெற முழு ஆதரவு வழங்கிய மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிம் மற்றும் மலேசிய அரசாங்கத்திற்கு மாநாட்டு
ஏற்பாட்டுக் குழு தலைவர் என்ற முறையில் நன்றியை பதிவு
செய்கிறேன். தமிழ் மொழியின் தொன்மை மற்றும் தனித்துவத்தை போன்றும் விதமாகவும் தமிழ் மொழி குறித்து உலகின் பல்வேறு நாடுகளில் மேற்கொண்டு வரும் ஆராய்ச்சிகளையும் கண்டுபிடிப்புகளையும் அதன்
வளர்ச்சியை மேலும் உலக அளவில் பரப்பும் நோக்கத்தோடு
நடத்தப்படும் இந்த மாநாட்டிற்கு செந்தமிழ் செல்வர் ஜயா. ஓம்ஸ் பா.
தியாகராஜன் உட்பட பலரும் முழு ஆதரவு வழங்கியுள்ளது
பாராட்டுக்குரியது.
உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தால் 1966 முதல் நடத்தப்பட்டு வரும்
உலகத் தமிழ் மாநாடு இதுவரை தமிழ்நாட்டில் சென்னை, மதுரை,
தஞ்சாவூர் , இலங்கை, மலேசியா, அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும்
மொரிசியசிலும் நடைபெற்றுள்ளது.
இதற்கு முன்னர் 1966,1986, 2015 மூன்று முறை உலகத் தமிழ் ஆராய்ச்சி
மாநாடுகளை நடத்திய பெருமை மலேசியாவுக்கு இருக்கிறது. இப்போது
நான்காவது முறையாக உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை
மலேசியா ஏற்று நடத்துவது வரலாறாகும்.

மலேசியாவில் 528 தமிழ்ப் பள்ளிகளில் நமது மாணவர்கள்
தாய்மொழியாக தமிழை கற்று வருகிறார்கள்.இந்த நாட்டில் தமிழ்
மொழிக்கும் அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது என்பது இது ஒரு
சான்றாகும். தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழ் இன்ப தமிழெங்கள் உயிருக்கு நேர் என்று தமிழை உணர்த்தியவர் பாரதிதாசன் அவர். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் பல தமிழ் அமைப்புகள் மற்றும் அறிஞர்களின் பல நாட்களின் முயற்சியை தொடர்ந்து தமிழ் மொழியானது ஒரு செம்மொழியாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டத்தின் போது
அப்போதைய இந்திய குடியரசுத் தலைவராக இருந்த பெரும்
மரியாதைக்குரிய அப்துல் கலாம் அவர்கள் 2004 ஆம் ஆண்டு ஜூன் 6
ஆம் தேதி தமிழை ஒரு செம்மொழியாக அறிவித்தார்.சிறப்புமிக்க தமிழ்
மொழியானது இதயத்தால் பேசப்பெற்று இதயத்தால் உணர வைக்கும்
மொழியாகும்.
காலத்தால் என்றென்றும் அழியாத செழுமை வாய்ந்த மொழி தான் தமிழ் மொழியாகும். இத்தகைய வளமை பொருந்திய நமது தாய் மொழியான தமிழ் மொழிக்கு இன்னும் பல இலக்கிய அணிகலன்களை சூட்டி அழகு சேர்ப்போம்.


மாண்புமிகு வ.சிவகுமார்
கோலாலம்பூர்
23 ஜூலை 2023

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles