சுக்மாவில் சிலம்பம் மற்றும் கபடிக்கு வாய்ப்பு வழங்கிய அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் மனிதவள அமைச்சர் வ சிவகுமார்

கோலாலம்பூர் ஜூலை 22 –
இந்தியர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பம் மற்றும் கபடி அடுத்த ஆண்டு சரவாக்கில் நடைபெறும் சுக்மா போட்டியில் இடம் பெற செய்த மலேசிய அரசுக்கு மனித வள அமைச்சர் வ சிவகுமார் இன்று நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

கோலாலம்பூர் மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 11ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் இன்று உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் மனிதவள அமைச்சர் சிவகுமார் இன்று மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் பல நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், பேராளர்கள், கவிஞர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

மலேசியாவில் 4 ஆவது முறையாக நடைபெறும் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு வழங்கிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு அவர் நன்றியை சமர்ப்பித்தார்

மேலும் பத்து ஆண்டுகளுக்கு பிறகு சுக்மா போட்டியில் சிலம்பத்தையும் கபடியும் இடம் பெற வாய்ப்பு வழங்கிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்திற்கு இந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதில் பெருமை கொள்வதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles