தமிழ் மொழியை வருங்கால சந்ததியினருக்கு கொண்டு செல்வதில் உள்ள சவால்கள் பற்றி விவாதிக்க இந்த மாநாடு ஒரு அடித்தளம்!ஏற்பாட்டுக் குழு தலைவர் அமைச்சர் சிவகுமார் பெருமிதம்

கோலாலம்பூர் ஜூலை 22-
மலேசியாவில் நடைபெறும் 11 உலகத் தமிழாராய்ச்சி மாநாடு தமிழுக்கு மகுடம் சூட்டும் விழாவாக அமைந்திருப்பதை என்னி பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழ் கூறும் நல்லுலகிற்கு தமிழூற்றின் தளமாக உலகத் தமிழாராய்ச்சி மாநாடு திகழும் என்பதில் ஐயமில்லை.

இந்த 11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில்
உலகில் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் பங்கு பெறும் இந்த நிகழ்வானது தமிழர்களின் ஒற்றுமை பறைசாற்றுகிறது.

தமிழ் கூறும் நல்லுலகிற்கு தமிழூற்றின் தளமாக இந்த மாநாடு அமையும் என்று உறுதியாக நம்புகிறேன்.

மேலும் இந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் மூலம் பல்வேறு நாடுகளில் இருந்து வருகை புரியும் தமிழ் அறிஞர்கள் தமிழ் மொழியை வருங்கால சந்ததியினருக்கு கொண்டு செல்வதில் உள்ள சவால்கள் பற்றி விவாதிக்க ஒரு நல்ல ஒரு தளமாக அமைந்துள்ளது .

ஆகவே கணினி யூகத்தில் தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல நாம் அனைவரும் ஓர் அணியில் திரள்வோம என்று மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் உரையாற்றிய போது மாநாட்டு ஏற்பாட்டுக் குழு தலைவர் மற்றும் மனிதவள அமைச்சர் வ சிவகுமார் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles