


கோலாலம்பூர் ஜூலை 23-
கோலாலம்பூர் மலாயா பல்கலைக்கழகத்தில் வேந்தர் அரங்கில் மிகப்பெரிய அளவில் 11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மனிதவள அமைச்சரும் மாநாட்டு ஏற்பாட்டுக் குழு தலைவருமான வ சிவகுமார் நேற்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னிலையில் உரையாற்றினார்.
முதலில் மலாய் மொழியில் பேசிய அவர் பின்னர் ஆங்கிலத்தில் உரையாடினார்.
பின்னர் எனது இனிய தமிழில் பேசுவதற்கு விரும்புகிறேன் என்று அவர் கூறியபோது 3,000 பேராளர்கள் கரவொலியால் மாநாட்டு மண்டபம் அதிர்ந்தது.
அமைச்சர் சிவகுமார் தனக்குரிய பாணியில் அதுவும் நாகரிகமான முறையில் தமிழில் உரையாற்றிய அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தார்.
மாநாட்டில் கலந்து கொண்ட பேராளர்களும் அமைச்சரின் உரையை கேட்டு சொக்கி போயினர் என்பது குறிப்பிடத்தக்கது.