
தித்திக்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டு
மலேசியா முன்னாள் இந்திய ராணுவ வீரர்களின் முப்படை சங்கத்தின் ஏற்பாட்டில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
பத்துகேவ்ஸ் செங்சா மண்டபத்தில் நடைபெற்ற இந்த விருந்து நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட முன்னாள் இந்திய ராணுவ வீரர்கள் கலந்து சிறப்பித்தனர்.
நலிவுற்ற மற்றும் பேரு குறைந்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் அன்பளிப்பு வழங்கப்பட்டது என்று கூட்டரசு பிரதேச மாநில தலைவர் மேஜர் சண்முகம் தெரிவித்தார்.
மலேசியா இந்திய முன்னாள் ராணுவ வீரர்கள் முப்படை சங்கத்தின் தலைவர் மேஜர் குணசேகரன், மலேசியா முன்னாள் ராணுவ வீரர்களின் சங்கத்தின் இயக்குநர் மேஜர் அஸ்மான் யூசுப் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.
இந்த விருந்து நிகழ்ச்சி வெற்றி பெறுவதற்கு டத்தோஸ்ரீ டாக்டர் குமரேசன் சுப்பிரமணியம், டத்தோ சுரேஷ் ராவ் டத்தோ ஜெனா, டத்தோ பரசுராமன், டத்தோ வெள்ளையன் மற்றும் டத்தோ படுக்கா மேஜர் ஜெனரல் மோகன்தாஸ் ஆகியோர் முழு ஆதரவு வழங்கினர்.
ம இகா உச்சமன்ற உறுப்பினர் டத்தோ ஏ.கே. இராமலிங்கம் கணிசமான நிதியை வழங்கி ஆதரவு வழங்கினார் என்று மேஜர் சண்முகம் தெரிவித்தார்.

