அகமட் ஜாஹிட் ஹமிடி
உரையை எதிர்க்கட்சியினர்
திரித்து கூறவில்லை!
டாக்டர் இராமசாமி பதிலடி

கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி நடைபெற்ற ம இகா தேசிய பேரவையில் உரையாற்றிய அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி உரையை எதிர்க்கட்சியினர் திரித்து கூறவில்லை.

அவரின் உரையில் அம்னோவின் உள்நோக்கம் அப்படியே பிரதிபலிக்கிறது.

தேசிய முன்னணி இந்த தேர்தலில் தோற்றால் 2018 ஆம் ஆண்டை காட்டிலும் நிலைமை மோசமாகிவிடும் என்று அவர் பல தலைவர்களின் பெயர்களை சொல்லி எச்சரிக்கிறார்.

இவர் பேசியது சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

உண்மை நிலவரம் எப்படி இருக்க இவரின் உரையை எதிர்க்கட்சியினர் திரித்து விட்டதாக கூறுவது ஏற்புடையதாக இல்லை என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி தெரிவித்தார்.

ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி இருக்கும் அம்னோ தலைவர்கள் அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக பொதுத் தேர்தலை ஒரு பகடை காயாக பயன்படுத்தி உள்ளனர் என்று டாக்டர் இராமசாமி சுட்டிக் காட்டியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles