கோலா சிலாங்கூரில் இளைஞர் தொழில் பாதுகாப்பு, சுகாதாரத் திட்டத்தை மனிதவள அமைச்சர் சிவகுமார் தொடக்கி வைத்தார்!

கோலசிலாங்கூர், ஆக.8-
சிலாங்கூர் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு மையம் எனப்படும் (STDC) இளைஞர் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் திட்டத்தை நேற்று கோலா சிலாங்கூரில் மனிதவள அமைச்சர் வ சிவகுமார் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

ஒரு பாதுகாப்பான, போட்டித்தன்மையுள்ள பணிச்சூழலை உருவாக்க ஒற்றுமை அரசாங்கத்தின் குறிக்கோளுக்கு இணங்க, தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம் (NIOSH) தொழில்சார் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் (OHS) தொடர்பான திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்த உறுதி பூண்டுள்ளது.

விரைவான வளர்ச்சியை அனுபவிக்கும் தொழில்துறை சகாப்தத்தில் தொழிலாளர்களின் நல்வாழ்வு இதில் அடங்கியுள்ளது.

அரசாங்கத்தின் இலக்குகளை ஆதரிக்க, NIOSH மூலம் மனித வள அமைச்சு, உயர்கல்வி நிறுவனங்கள்,TVET மாணவர்கள், இராணுவ வீரர்கள் மற்றும் B40 குடும்பத்தைச் சேர்ந்த இந்திய இளைஞர்களை இலக்கு குழுக்களுக்காக கொண்டு பல்வேறு இலவச படிப்புகளை வழங்குவது உட்பட பல்வேறு முயற்சிகளை செயல் படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோலசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினரும் மலேசியாவின் முன்னாள் சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர். Zulkefli Ahmad, தேசிய தொழில் பாதுகாப்பு , சுகாதார நிறுவனத்தின் (NIOSH) நிர்வாக இயக்குனர் Tuan Haji Ayop Salleh, Timbalan Ketua Pengarah (Pengurusan & Pembangunan) Jabatan Tenaga Kerja Tuan Shanmugam Thiagarajan ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles