பயிற்சி மற்றும் மனிதவள மேம்பாட்டு முதலீடுகள் பொருளாதாரம் சமூக மேம்பாட்டிற்கான திறவுகோல் என்கிறார் மனிதவள அமைச்சர் சிவக்குமார்

சிரம்பான் ஆக 11-
நாட்டின் பொருளாதார சமூக வளர்ச்சிக்கு பயிற்சி மற்றும் மனிதவள மேம்பாட்டுக்கான முதலீடுகள் முக்கியம் என மனிதவள அமைச்சர் வ. சிவக்குமார் இன்று தெரிவித்தார்.

மனித வள மேம்பாட்டுக் கழகம் HRD Corp ஏற்பாடு செய்திருந்த நெகிரி செம்பிலான் மாநில அளவிலான karnivel jom latih madani எனப்படும் “திறமையான பயிற்சியின் மூலம் எங்கள் தொழிலாளர்களின் திறன்களை உயர்த்துவோம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அதிக வேலைவாய்ப்பை உருவாக்குவோம் மற்றும் பல்வேறு தொழில்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இது பெரிதும் உதவுகிறது.

பயிற்சி மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறைகளில் நேர்மறையான, அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தவும்,
ஊக்கப்படுத்தவும், பல்வேறு நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளவும், அவர்களின் நெட்வொர்க்கை வலுப்படுத்தவும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பங்கேற்பாளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles