ஈராக்கில் பார்லிமென்ட்டை குறி வைத்து அடுத்தடுத்து ராக்கெட் குண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்காசிய நாடான ஈராக்கில், 2021அக்டோபரில் பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. அதில் எந்தக் கட்சிக்குமே பெரும்பான்மை கிடைக்காததால் அரசியல் குழப்பம் நிலவுகிறது.
ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், இடைக்கால பிரதமராக முகமது அல் காதிமி பதவி வகித்து வருகிறார். ஈராக் அதிபர் தேர்தல் தொடர்பாக பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று பார்லிமென்டை குறி வைத்து அடுத்தடுத்து 9 முறை ராக்கெட் குண்டு வீச்சு தாக்குதல் சம்பவம் நடந்ததாகவும் இதில் பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.