மலேசியர்களை மேலும் பிரிக்க வேண்டாம்!செனட்டர் லிங்கேஸ்வரன் வேண்டுகோள்

பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பதவி இனத்திற்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது பினாங்கில் மற்றொரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்திய சமூகத்தில் இருந்து மலேசியர்களின் நலனைப் பிரதிநிதித்துவப்படுத்த, 3 தவணை சட்டமன்ற உறுப்பினர், மாண்புமிகு ஜக்தீப் சிங் தியோ, மாநில ஆட்சி குழு உறுப்பினராகவும், துணை முதலமைச்சராகவும் பதவியேற்றார்.

இதனை தொட்டு, முன்னாள் துணை முதலமைச்சர் பேராசிரியர் டாக்டர் ராமசாமி ஏன் இந்த பதவி தமிழருக்கு வழங்கப்படவில்லை என்று கேள்வியை எழுப்பி உள்ளார்.

ஹிண்ட்ராப் பேரணியைத் தொடர்ந்து 2008 இல் உருவாக்கப்பட்ட துணை முதலமைச்சர் II பதவியானது இந்தியத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த மலேசியர்களுக்கு ஒதுக்கப்பட்டது என்று பேராசிரியர் ராமசாமி கூறுகிறார்.

நிச்சயமாக இங்கே ஒரு திருத்தம் செய்யப்பட வேண்டும்.

வரலாற்று ரீதியாக 2008 முதல், துணை முதலமைச்சர் II பதவியானது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசியருக்கு ஒதுக்கப்பட்டது.

பேராசிரியர் டாக்டர் ராமசாமி, ஒரு தமிழர், 3 தவணை பதவி வகித்து, முதல் மற்றும் இதுவரை ஒரே மலேசிய இந்திய துணை முதலமைச்சர் II என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இதற்கு சரியான விளக்கம் எனபது, இது மலேசிய இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட்ட பதவி.

தமிழ் இனத்தைச் சேர்ந்த மலேசிய இந்தியர்களுக்கு மட்டும் அல்ல என்று செனட்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

, இந்த சூழலில், பஞ்சாபி வம்சாவளியைச் சேர்ந்த மலேசிய இந்தியரான மாண்புமிகு ஜக்தீப், பேராசிரியர் டாக்டர் ராமசாமி ஒரு மலேசிய இந்தியராக இருப்பதைப் போல, இவரும் மலேசிய இந்தியர் ஆவார்.

ஆகவே இந்த துணை முதல்வர் பதவி விவகாரத்தை இனியும் பெரிதாக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles