கிக் தொழிலாளர்களின் நலனில் மனிதவள அமைச்சு பெரிதும் அக்கறை கொண்டிருக்கிறது! அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

புத்ரா ஜெயா ஆக 17-
அனைத்துலக வர்த்தகம் மற்றும் தொழில்துறை சம்மேளனத்தின் (Dewan Perdagangan dan Industri Antarabangsa (MICCI)) பேராளர்கள் இன்று மரியாதை நிமித்தமாக மனிதவள அமைச்சர் வ சிவகுமாரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தையை நடத்தினர்.

கிக் தொழில் தளம் வழங்குநர்களான Shopee, Lazada, Grab, Carsome, GoGet, Lalamove மற்றும் Foodpanda ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

கிக் தொழிலாளர்களின் நலன் தொடர்பான தற்போதைய பிரச்சினைகளைக் கையாள்வதில் மனித வள அமைச்சின் முயற்சிகள் குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது .

கிக் தொழில்துறை தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கும் முயற்சியில் p-hailing தொடர்பான பிரச்சினைகளை ஒருங்கிணைக்க ஒரு அதிகாரப்பூர்வ செயலகத்தை நியமிப்பதற்காக RM1 மில்லியன் ஒதுக்கீடு செய்வதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் அறிவித்தார்.

பயனீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் நலனைப் பாதுகாக்கும் திறன் கொண்ட முன்முயற்சிகளைத் தயாரிப்பதற்கும் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை ஒருங்கிணைத்துச் சமாளிப்பதற்கும் செயல்படும் ஒரு அமைப்பாகச் செயல்படும் ஒரு ஆணையத்தை அமைப்பதற்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறுவதற்கான குறிப்பேடு ஒன்றையும் அமைச்சு தயாரித்து வருகிறது என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

கிக் தொழில் மூலம் வாழ்வாதாரம் சம்பாதிக்கும் மக்கள் அரசாங்க ஆதரவிலிருந்து ஒதுக்கி வைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்றார் அவர்.

Malaysia Madani அரசாங்கம் இந்த கிக் தொழிலாளர்களின் புகார்கள் மற்றும் வெளிப்பாடுகள் குறித்து எப்போதும் அக்கறையும் கொண்டிருக்கிறது என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles