

புத்ரா ஜெயா, ஆக 17-
நாட்டின் தொழில் புரட்சி அடிப்படையில் வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார தொடர்பான வேலை வாய்ப்புகள் நாட்டில் மேலோங்கி வருகின்றன.
தொழிலிடத்தில் மரணம் மற்றும் விபத்துகளில் ஏற்படும் உயிர் இழப்பையும் பொருள் இழப்பையும் குறைப்பதற்கு ஒவ்வொரு வேலை இடத்திலும் வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.
ஹோசா 1994 சட்ட அமைப்பின்படி இந்த அதிகாரிகள் நியமனம் செய்யப்பட வேண்டும்.
இதுபோன்ற வாய்ப்புகளை இந்திய இளைஞர்கள் பயன் படுத்தி கொள்ள வேண்டும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் வலியுறுத்தினார்.
மனிதவள அமைச்சின் கீழ் செயல்படும் தேசிய வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதார கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த வாய்ப்புகளை இந்திய இளைஞர்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் கேட்டுக் கொண்டார்.

