சொந்த கட்டடத்தை வாங்கும் முயற்சியில் மலேசிய தமிழ்க் கலைஞர் இயக்கம்

புத்ரா ஜெயா ஆக 15-
மலேசிய தமிழ் கலைஞர்களுக்கு அரணாக விளங்கிக் கொண்டிருக்கும் மலேசிய தமிழ்க் கலைஞர் இயக்கம் சொந்த கட்டடத்தை வாங்கும் முயற்சியில் தீவிரமாக களம் இறங்கி உள்ளது.

கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் சொந்த கட்டடத்தை வாங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது என்று அதன் தலைவர் கே.பழனிசாமி தெரிவித்தார்.

மரியாதை நிமித்தமாக மனிதவள அமைச்சர் வ சிவகுமாரை அவரது அலுவலகத்தில் மலேசிய தமிழ்க் கலைஞர் இயக்கத்தின் பொறுப்பாளர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

வரும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி கோலாலம்பூர் சிலாங்கூர் கிளப்பில் மலேசிய தமிழ்க் கலைஞர் இயக்கத்தின் கட்டட நிதிக்கு நிதி திரட்டும் வகையில் அதிர்ஷ்டக்குலுக்கு டிக்கெட் விற்பனை தொடக்க விழா மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அதன் தலைவர் கே. பழனிசாமி தெரிவித்தார்.

இதற்கான அழைப்பிதழை மனிதவள அமைச்சர் சிவகுமாரிடம் அவர் வழங்கினார்.

மலேசிய தமிழ்க் கலைஞர் இயக்கம் சொந்த கட்டடத்தை வாங்கும் முயற்சியை மனிதவள அமைச்சர் சிவகுமார் பெரிதும் வரவேற்றார்.

இந்த முயற்சி வெற்றியடைய தாமும் ஆதரவு வழங்குவதாக மனிதவள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

மேலும் மலேசிய கலைஞர்கள் இந்த திட்டத்திற்கு முழு ஆதரவு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles