யானையால் தாக்கப்பட்டுசிகிச்சை பெற்று வரும் ரூபன் நவநீதன் மருத்துவ சிகிச்சை நிதிக்கு மனிதவள அமைச்சர் சிவகுமார் பேருதவி

புத்ரா ஜெயா,செப் 2-
கம்போடியா நாட்டில் யானைகள் பராமரிப்பு மற்றும் காக்கும் திட்டத்தில் பங்கேற்று பணியாற்றிபோது திடீரென யானை ஒன்றால் தாக்கப்பட்டதில் நவநீதன் ரூபன் கடுமையான காயங்களுக்கு ஆனாளார்.

யானையின் தந்தம் வயிற்றில் குத்தியதில் இவர் மோசமான காயங்களுக்கு ஆளாகி 70 நாட்களுக்கு மேலாக தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை பெற்றார்.

இப்போது மெல்ல மெல்ல தேறி வரும் அவரின் மருத்துவ சிகிச்சைக்கு உதவும் வகையில் மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் நேற்று 5,000 வெள்ளியை வழங்கி பேருதவி புரிந்தார்.

நான் வழங்கும் இந்த நிதி இளைஞர் நவநீதன் ரூபனுக்கு பெரும் ஆறுதலாகவும் உதவியாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.

அவர் மிக விரைவில் பூர்ண குணமடைய இறைவனை பிரார்த்தனை செய்வதாக மனித வள அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.

தக்க நேரத்தில் தமக்கு உதவி புரிந்த மனிதவள அமைச்சர் சிவகுமாருக்கு இளைஞர் நவநீதன் ரூபன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles