
ஒரு சிறந்த மக்கள் சேவையாளராக விளங்கிக் கொண்டிருக்கும் சார்ல்ஸ் சந்தியாகோ மீண்டும் கிள்ளான் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்குங்கள் என்று கிள்ளான் சீனர் வர்த்தக சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த மூன்று பொதுத் தேர்தலில் கிள்ளான் நாடாளுமன்ற தொகுதியில் அமோக வெற்றி பெற்ற சார்ல்ஸ் சந்தியாகோ தொகுதி மக்களுக்கு நிறைய சேவைகளை வழங்கி இருக்கிறார்.
கிள்ளான் தொகுதி மக்கள் எதிர் நோக்கிய பல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிருக்கும் அவர் நாடாளுமன்றத்திலும் ஒரு சிறந்த உறுப்பினராக செயல்பட்டிருக்கிறார்.
கோவிட் 19 நோய்த் தொற்று மற்றும் வெள்ளப் பேரிடர் காலத்தில் தொகுதி மக்களுக்கு நிறைய உதவிகளை செய்தார்.
ஒரு துணிச்சல் மிக்க அரசியல்வாதியான அவர் மீண்டும் கிள்ளான் நாடாளுமன்றத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
இவர் ஒரு எளிய மனிதர். அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவர். மக்கள் பிரச்சனையை நேரில் சென்று தீர்க்கக் கூடியவர்.
நாட்டில் மிகச்சிறந்த அரசியல்வாதிகளில் ஒருவராக விளங்கும் இவர் தொடர்ந்து கிள்ளான் தொகுதி மக்களுக்கு சேவையற்ற மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என கிள்ளான் சீனர் சங்கம் கோரிக்கை முன் வைத்துள்ளது.

