
பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் வி. சிவகுமார் வரும் பொதுத் தேர்தலில் மீண்டும் அமோக வெற்றி பெறுவார் என்பதில் ஐயமில்லை.
2008 இல் நடைபெற்ற தேர்தலில் துரோனோ சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற அவர் பின்னர் பேராக் மாநில சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.
மலேசிய அரசியல் வரலாற்றில் மாநில சட்டமன்ற சபாநாயகராக பொறுப்பேற்ற முதல் இந்தியர் இவர் ஆவார்.
2013,2018 இல் நடைபெற்ற தேர்தலில் பத்து காஜா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற இவர் தொகுதி மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றி வருகிறார்.

மித்ர நிதி மோசடி மற்றும் பட்ஜெட்டில் தமிழ்ப் பள்ளிகளுக்கான மானியம் குறைக்கப்பட்டது தொடர்பில் துணிந்து குரல் எழுப்பி வந்தார்.
இந்நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருப்பதால் விரைவில் பொதுத் தேர்தல் நடத்தப்படுகிறது.
மீண்டும் பத்து காஜா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இவர் அமோக வெற்றி பெறுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

