
அரசாங்கம் மற்றும் தனியார் உயர் கல்விக்கூடங்களில் பயிலும் மாணவர்களுக்கு உதவும் வகையில் நெகிரி செம்பிலான் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் ஆண்டு தோறும் 40 லட்சம் வெள்ளியை ஒதுக்கி உதவி புரிந்து வருகிறது.
அந்த வகையில் நீலாய் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாணவர்களுக்கு உதவி நிதி வழங்கப்பட்டுள்ளது.
நீலாய் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெ. அருள் குமார் நேற்று மாணவர்களுக்கு கல்வி நிதியை வழங்கி உதவி புரிந்தார்

